ரயில்வேல வேல வேணுமா? அப்போ 45 லட்சம் கொடு! மோசடியில் ஈடுபட்ட முதியவர்!!

தொடர்ச்சியாக மோசடி செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அரசு பணி வாங்கி தருவேன் என்று கூறி பல எளியவர்கள் மத்தியில் ஆசையை தூண்டி இறுதியில் அவர்கள் பெரும்பாலும் மோசடி செய்கின்றனர்.

 

ரயில்வேஅதன் தொடர்ச்சியாக ரயில்வேயில் வேலை வாங்கித் தருவேன் என்று கூறி 45 லட்சம் மோசடி செய்துள்ளார் முதியவர். இவ்வாறு மோசடி செய்த முதியவர் தற்போது கைது செய்யப்பட்டார்.

மகனுக்கு ரயில்வே வேலை வாங்கித் தர கூறி சிவராமன் என்பவரிடம் திருத்தணியை சேர்ந்த கிருஷ்ணன் பணம் கொடுத்துள்ளார். வேலைவாய்ப்பு வாங்கித் தரும் நிறுவனம் நடத்திவரும் வேளச்சேரியை சேர்ந்த சிவராமன் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளார்.

சிவராமனுக்கு 62 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது. மூன்று மாதங்களில் வேலை வாங்கி தரப்படும் என்று கூறிய சிவராமன் 45 லட்சத்தை பெற்றுள்ளார். பணத்தைப் பெற்ற சிவராமன் திடீரென்று தலைமறைவான போலீசில் புகார் அளித்தனர்.

பணத்தை கொடுத்த கிருஷ்ணன் குடும்பத்தினர் மிகுந்த பதற்றத்தில் இருந்தனர்.கடந்த ஒன்றரை ஆண்டாக  தலைமறைவாக  இருந்த சிவராமனை இன்று காலை தனிப்படை போலீஸ் கைது செய்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment