100 கோடியில் 45.50 கோடி ரூபாய் மோசடி: கைவரிசை காட்டிய 18 ஊழியர்கள்!

தற்போது இந்தியாவில் மக்கள் அனைவரும் தங்களது பணத்தை வங்கியில் போட்டு சேமித்து வைக்கின்றனர். ஆனால் அவ்வப்போது வங்கியில் திருட்டு சம்பவம் நடைபெறுகிறது. இந்த நிலையில் வங்கி ஊழியர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டது மிகுந்த பரபரப்பு உருவாகியுள்ளது.100 கோடி

இந்த சம்பவம் தொடர்பாக 18 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை துறைமுகத்தின் நிரந்தர வைப்புத் தொகை மோசடி செய்த வழக்கில் 18 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு இந்தியன் வங்கிக் கிளை முன்னாள் மேலாளர் சேர்மதி ராஜா உள்பட 18 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.சென்னை துறைமுக அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது சி.பி.ஐ.

இந்தியன் வங்கியில் ரூபாய் 100 கோடியை சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் டெபாசிட் செய்திருந்தது. துறைமுக ஊழியர்கள் சிலர் வங்கி மேலாளர் உதவியுடன் டெபாசிட் தொகையை வேறு கணக்கு மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை துறைமுக பொறுப்பு கழக பெயரில் போலி வங்கி கணக்கு தொடங்கி டெபாசிட் தொகையை மாற்றியுள்ளனர். வேறு கணக்கிற்கு மாற்றப்பட்ட டெபாசிட் தொகையை முன்கூட்டியே வைப்புத்தொகை காலத்தை முடித்து பணம் பெற்றுள்ளனர். வங்கி மேலாளர் துறைமுக ஊழியர்கள் ஒத்துழைப்புடன் ரூபாய் 45.50 கோடியை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment