
செய்திகள்
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி – பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார்!!
சென்னை மாமல்லபுரத்தில் 44-வது ஒலிம்பிக் போட்டி தொடங்க இருப்பதால் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க சென்னை வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் வீரர்-வீராங்கனைகள் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வந்த வண்ணமாகவே இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சென்னை மாநகரம் முழுவதும் விழாக்கோலமாக காட்சியளிக்கிறது.
அதேபோல் நேரு உள்விளையாட்டு அரங்கம் மின்னொளியில் ஜொலிப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் பிரதமர் மோடியின் வருகையை கருத்தில் கொண்டு சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் வருகையை கொண்டாடும் விதமாக பாஜகவினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும், பிரதமர் மோடியை வரவேற்க இபிஎஸ் சென்னை விமான நிலையத்திற்கு சென்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
