Connect with us

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி-இன்று முதல் ட்ரோன் கேமரா பறக்கத் தடை!!

chess olympiad

தமிழகம்

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி-இன்று முதல் ட்ரோன் கேமரா பறக்கத் தடை!!

முதன்முறையாக இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இது தமிழகத்திற்கு கிடைத்த பெருமையாக காணப்படுகிறது. இதற்கு முன்னதாக இந்த போட்டியானது ரஷ்யாவில் நடைபெற இருந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் ரஷ்யா மற்றும் உக்ரேன் நாட்டுக்கு இடையே போர் நிலவிக் கொண்டு வருவதால் போட்டி தமிழகத்திற்கு மாற்றியமைக்கப்பட்டது. இந்த 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தலைநகர் சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரத்தில் நடக்கிறது.

இதற்காக ஏராளமான நாடுகள் வரிசையாக தங்களது அணியை அறிவித்துக் கொண்டு வருகின்றனர். அதிலும் நம் இந்தியா தற்போது வரை மூன்று விதமான அணிகளை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கும் பகுதிக்கு அருகே ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் இன்று முதல் ட்ரோன் கேமரா பறக்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தடைவித்துள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருப்பதை முன்னிட்டு பாதுகாப்பு நலன் கருதி ட்ரோன் கேமரா பறக்க தடை விதிக்கப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top