3 நாட்களில் 44 நீதிபதிகள்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அதிரடி!

நீதிபதிகள் நியமனம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ஏ.எஸ் ஓகா ஆகியோரின் முன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் பல்வேறு நாடுகளில் இருக்கக்கூடிய நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதற்காக 104 பெயர்கள் மத்திய அரசிடம் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார்.

இனி மழைக்கு வாய்ப்பு இருக்கா?- வானிலை மையம் புதிய தகவல்!

இதில் 44 பேரின் பெயர்கள் பரிந்துறைக்கப்பட்டு 3 நாட்களுக்குள் இறுதிசெய்யப்பட்டு உச்சநீதிமன்றத்திற்கு அனுப்படும் என தெரிவித்துள்ளார்.

அதே போல் மீதமுள்ளவரின் எண்ணிக்கையை விரைவில் முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளார். பின்னர் வழக்கானது ஒத்திவைக்கப்பட்டது. மேலும், ஏற்கனவே வழக்கு விசாரணையில் போது மத்திய அரசு, உச்சநீதிமன்றத்திற்கும் வார்த்தைப்போர் நிலவி வந்தது.

இந்தூரில் சோகம்! ஜிம்மில் மாரடைப்பு.. ஹோட்டல் உரிமையாளர் மரணம்!

இதில் 104 நீதிபதிகள் நியமனம் செய்வது தொடர்பாக எப்போது முடிவெடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பிய நிலையில் தற்போது மத்திய அரசு விளக்கம் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.