தமிழ்நாட்டில் 43% அதிக மழை! சென்னையில் 40% அதிக மழை! சென்னையில் 3 நாட்களுக்கு தொடர் கனமழை!!

தற்போது நம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் நிகழ்கிறது. இந்த வடகிழக்கு பருவமழை காலம் எதிர்பார்த்ததைவிட அதிக அளவு மழை பொழிவை தந்துள்ளதாக காணப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை

தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதிக மழைப்பொழிவு கிடைத்துள்ளன. அதன்படி தமிழகத்தில் இதுவரை 43 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதோடு மட்டுமில்லாமல் சென்னையில் முப்பத்தி ஒன்பது சென்டிமீட்டர் அதற்கு பதிலாக ஐம்பத்தி ஐந்து சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது என்று கூறியுள்ளது. இதனால் சென்னையில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக மழை கிடைத்துள்ளது.

சென்னை

தற்போது வரை 24 சென்டிமீட்டர் பதிலாக 35 மீட்டர் வரை மழை பெய்துள்ளது.  தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் வருகின்ற பத்தாம் தேதி 20 சென்டிமீட்டர் மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் நாளை மறுநாள் கனமழை வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நவம்பர் 11ம் தேதி மிக பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.இதனால் அடுத்து வரவுள்ள நாட்களிலும் சென்னையில் மிக கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment