Connect with us

சென்னையிலும் குறைந்தாலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா!

News

சென்னையிலும் குறைந்தாலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா!

2600f3d973b4d80c2d1bab01068e5e16

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 4244 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,38,470ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் இன்று மட்டும் 1168 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 77338 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு 2000ஐ தாண்டியிருந்த நிலையில் இன்று 6வது நாளாக 2000க்கும் குறைந்துள்ளது சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 68 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 1966 பேர் பலியாகியுள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று 3617 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 89,532 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இன்று 41,325 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

0869da3d887c6b282947385d82890a4f
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top