நேற்றைய தினம் இந்திய அளவில் நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டது. அதில் முதல் 20 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த யாருமே இல்லை என்றும் கூறப்பட்டது.
இந்தியாவில் மொத்தம் 56.34 சதவீதம் பேர் நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர் என்றும் கூறப்பட்டது. இதில் மாணவிகளே அதிகமாக காணப்படுகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் மூலமாக 42 ஆயிரத்து 202 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில பாடத்திட்டத்தில் பயின்று 88 ஆயிரத்து 933 பேர் நீட் தேர்வு எழுதினார்கள்.
இவர்களில் 42 ஆயிரத்து 202 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் நுழைவுத் தேர்வு எழுதியவர்களில் முதல் 10,000 இடங்களில் 175 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 318 பேரில் மொத்தம் 58 ஆயிரத்து 922 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதனால் மாநில பாடத் திட்டத்தின் மூலமாக நீட் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக காணப் பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.