பீதியில் பொதுமக்கள்; ஜப்பானில் ஒரே நாளில் 420 பேர் பலி..!!

கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகை ஆட்டிப்படைந்து வருகிறது. குறிப்பாக இத்தகைய வைரஸ்ஸால் பல லட்சம் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டும், பல கோடி பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்..

இந்நிலையில் ஒமைக்ரானின் உருமாற்றம் அடைந்துள்ள BF.7 வகை கொரோனா சீனா, தென்கொரியா, ஹாங்காங், அமெரிக்கா போன்ற நாடுகளில் கிடுகிடுவென பரவி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்றைய தினத்தில் மட்டும் ஜப்பானில் 420 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதே போல் நேற்று ஒரே நாளில் மட்டும் 192,063 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், டோக்கியாவில் புதிதாக 18,372 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்தகைய முந்தைய தொற்றை விட 1,871 குறைவாகும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இத்தகைய வைரஸ்ஸின் காரணமாக வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் அனைத்து பயணிகளுக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.