இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 41 பேர் பலி; பீதியில் பொதுமக்கள்!!!

கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகை ஆட்டிப்படைத்து வந்த நிலையில் இந்த வைரஸ்ஸின் தாக்கமானது இன்னும் குறைந்தபாடில்லை.

குறிப்பாக வைரஸ்ஸின் திரிபானது தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில்  கடந்த சில தினங்களாக தொற்று பரவலானது  தொடர்ந்து  அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் மேலும் 16,866 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போல் 41 பேர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளது.

கொரோனாவால் தற்போது 1.50 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளதாகவும், கொரோனாவில் இருந்து 18,148 பேர் குணமடைந்துள்ளதாக கூறியுள்ளது.

மேலும், கொரோனாவின் அச்சம் இன்னும் குறையாமல் இருக்கும் சூழலில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4 ஆக அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment