போலி பாஸ்போர்ட் வழக்கில் 41 பேர் குற்றவாளிகள்!! – தமிழக அரசு தகவல்!!

போலி பாஸ்போர்ட் வழக்கில் 41 நபர்கள் குற்றவாளியாக கண்டறியப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் போலியான தகவல் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், பெரும்பாலானோர் இலங்கை அகதிகளாக இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் அகதிகளாக இருக்கும் இவர்கள் எந்த நாட்டிற்கும் செல்ல இருப்பதால், சட்ட விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். இவர்களை Q பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணையை எவ்வாறு வானத்து இன்று வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 41 நபர்கள் குற்றவாளியாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், 14 மத்திய அரசு ஊழியர்கள், 5 தமிழக அரசு ஊழியர்கள் என கூறினார். அதே சமயம் Q பிரிவு காவல்துறையினர் வழக்கு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.