டுவிட்டரில் இனி 4000.. எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பின்னர் பல அதிரடி நடவடிக்கை எடுத்தார் என்பது குறிப்பாக பல முக்கிய ஊழியர்களை வேலை நீக்கம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

twitter 1 Copy அதுமட்டுமின்றி புளூடிக் வைத்திருக்கும் பயனாளிகளுக்கு 8 டாலர் கட்டணம் விதிக்கப்பட்டது என்பதும் இதனால் டிவிட்டர் பயனாளிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டுவிட்டரின் ஆரம்பகாலத்தில் 140 கேரக்டர் மட்டுமே பதிவு செய்யும் வசதி இருந்தது என்பதும் அதன் பின்னர் கடந்த 2017ம் ஆண்டு 280 ஆக உயர்த்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது 280ல் இருந்து 4000 கேரக்டர் என உயர்த்த உள்ளதாக எலான் மஸ்க் அவர்கள் தெரிவித்துள்ளார்.

twitter2

எனவே டுவிட்டரில் இனி நீண்ட பதிவுகள் பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் டுவிட்டரின் ஒரே சிறப்பம்சம் சொல்லும் கருத்தை சுருக்கமாக கூறும் அம்சம்தான் என்ற நிலையில் தற்போது 4000 கேரக்டர் என விரிவு படுத்தப்பட்டால் மற்ற சமூக வலைதளங்களுக்கும் டுவிட்டருக்கும் உள்ள வித்தியாசம் இல்லாமல் போய்விடும் என்றும் பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டுவிட்டரில் 4000 கேரக்டர் உயர்ந்ததை அடுத்து பலர் கதை எழுத ஆரம்பிப்பார்கள் என்றும் அது பயனாளிகள் மத்தியில் வரவேற்பு தருமா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.