சென்னையில் இன்று 400 தடுப்பூசி முகாம்கள்: முழு விபரங்கள்

2c38ada28ab2c660fef62382d4818b8c

சென்னையில் இன்று 400 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த முகாம்களில் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

சென்னை மாநகராட்சி கடந்த சில நாட்களாக சென்னை மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் தீவிரமாக உள்ளது. முதியவர்களுக்கு வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை சமீபத்தில் சென்னை மாநகராட்சி அறிவித்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் சென்னையில் உள்ள 200 வார்டுகளில் வார்டுக்கு 2 முகாம்கள் என்ற அடிப்படையில் மொத்தம் 400 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் பள்ளிகள் மாநகராட்சி அலுவலகங்கள் உள்பட பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த 400 முகாம்களில் சென்னை மக்கள் தடுப்பூசி செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது சென்னையில் உள்ள தடுப்பூசி முகாம்கள் எங்கெங்கு உள்ளது என்பது குறித்த முழு விவரங்கள் http://covid19.chennaicorporation.gov.in/covid/mega_camp/  என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள முகாம்களில் சென்று தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment