ராணுவ வீரர்களே விழிப்போடு இருங்கள்! இந்தியாவுக்குள் ஊடுருவ 400 பயங்கரவாதிகள் காத்திருப்பாம்….

ஒவ்வொரு நாட்டிற்கும் பெரும் பிரச்சினையாக அமைப்பது எல்லைப் பிரச்சனை தான். அதிலும் குறிப்பாக இந்தியாவிற்கு எல்லைப் பிரச்சினையாக சீனா மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் அமைந்துள்ளது. அதிலும் சீனா, இந்தியா மீது அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்படுத்திக் கொண்டே வருகிறது.

அதோடு பல பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. இது தொடர்பாக இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை பல கட்டங்களாக நடைபெற்றது. சீனா மட்டுமின்றி இந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பலரும் அவ்வப்போது அத்துமீறி நுழைகின்றனர்.

இதுகுறித்து ராணுவ தளபதி பல முக்கிய தகவல்களை கூறியுள்ளார். அதன்படி இந்தியாவுக்குள் ஊடுருவ சுமார் 400 பயங்கரவாதிகள் காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி இந்தியாவுக்குள் ஊடுருவ 300 முதல் 400 பயங்கரவாதிகள் எல்லையில் காத்துக் கொண்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி நரவானே கூறினார்.

எல்லையில் நிலைமை கடந்தாண்டை விட சிறப்பாக இருந்தாலும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து புகலிடமாக அமைந்து வருகிறது என்றும் நரவானே கூறினார். என்கவுண்டரில் 144 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் ராணுவ தளபதி நரவானே கூறினார் கடந்த ஆண்டு சீனாவால் பதற்றம் நிலவிய நிலையில் 14 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது என்றும் ராணுவ தளபதி நரவானே கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment