Connect with us

மேம்பாலங்கள் அடியில் வண்ண விளக்குகள்..! மேலும் பல சுவாரசியமான அறிவிப்புகள்…!!

flyover lights

தமிழகம்

மேம்பாலங்கள் அடியில் வண்ண விளக்குகள்..! மேலும் பல சுவாரசியமான அறிவிப்புகள்…!!

மேம்பாலங்கள் அடியில் வண்ண விளக்குகள்..! மேலும் பல சுவாரசியமான அறிவிப்புகள்…!!

இன்றைய தினம் காலையில் தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் அமைச்சர் கே.என்.நேரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மறு சீரமைப்பு திட்டம் பற்றியும் பல்வேறு விதமான திட்டங்கள் பற்றியும் அறிவித்தார்.

அதில் ரூபாய் 400 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் நடைபெற உள்ளதாக அவர் கூறினார். சென்னையில் ரூபாய் 400 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.

ஆவடி மற்றும் காஞ்சிபுரம் நகராட்சியில் குடிநீர் திட்டப்பணிகள் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார். கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

தமிழ்நாட்டில் பேரூராட்சிகளில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 200 கோடியில் சாலைகள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார். வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் வாகன நெரிசலை குறைக்க 98 கோடியில் புதிய மேம்பாலம் கட்டப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

கோடம்பாக்கம், அடையாரில் குடிநீர் வினியோக அமைப்பை மேம்படுத்தி ரூபாய் 1958.25 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார். ஜீவன் நகரில் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டிலும் கீழ்பாக்கம் தோட்டத்தில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் நகைகள் நடை பாதை அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சென்னை சின்ன நோலம்பூர் ஓம்சக்தி நகர் ஆகிய இடங்களில் இருந்து ரூபாய் 120 கோடியில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். சென்னை ஆலந்தூர் பகுதிகளில் கழிவுநீர் வெளியேற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கே.என். நேரு கூறினார்.

சென்னையில் மேம்பாலங்கள் அடியில் செயற்கை நீரூற்று ,வண்ண விளக்குகள் அமைக்க ரூபாய் 25 கோடியில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். தையூர் ஏரியை மய்யமாகக் கொண்டு கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

மயிலாடுதுறை பகுதி கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ஆய்வு நடத்தி வருவதாகவும் அவர் கூறினார். சென்னை மாநகராட்சியில் தொகுதிகளுக்கு ஏற்றவாறு மண்டலங்கள் மறுசீரமைக்கப்பட்ட கூடுதல் மண்டலம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top