40 கதை சர்ச்சையே ஓயல… அதுக்குள்ள இன்னொரு சர்ச்சையா? அஷ்வினுக்கு என்னதான் ஆச்சு?

திரையுலகை பொருத்தவரை நாம் ஒரு நிலையான இடத்திற்கு அதாவது இனி நாம் தான் நம்மை யாராலும் அசைக்க முடியாது என்ற நிலைக்கு வரும் வரை சற்று அடக்கிதான் வாசிக்க வேண்டும். இல்லையெனில் தூக்கி வீசி எறிந்து விடுவார்கள். எனவே முன்னணி நடிகர்களே பொதுவெளியில் பேசும்போது யோசித்து தான் பேசுவார்கள்.

அஷ்வின்

 

ஆனால் தான் ஹீரோவாக நடித்த முதல் படமே வெளியாகாத நிலையில் இளம் நடிகர் அஷ்வின் சமீபத்தில் பேசியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. சமையல் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான அஷ்வின் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த இப்படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சியில் பேசிய அஷ்வின், “கதை கேட்கும் போது கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கி விடுவேன். இதுவரை 40 கதைகளை கேட்டு தூங்கி இருக்கிறேன்” என பேசியது மிகப்பெரிய சர்ச்சையானது. இன்னும் இந்த பிரச்சனை ஓயவில்லை. அதற்குள் அஷ்வின் மற்றொரு சர்ச்சையில் சிக்கி விட்டாராம்.

ஆமாங்க சமீபத்தில் கதை சொல்ல வந்த இயக்குனரை அஸ்வின் காக்க வைத்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன்படி, இயக்குனர் ஒருவர் முன்னணி தயாரிப்பு நிறுவனத்தை அணுகி கதை கூறியுள்ளார். அவர்கள் அஷ்வினை ஹீரோவாக பரிந்துரைத்து, அவரிடம் கதை சொல்ல கூறியுள்ளார்களாம்.

இதுகுறித்து தயாரிப்பு தரப்பில் இருந்து அஷ்வினிடம் தெரிவித்த போது, அஷ்வினோ சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் அதுவும் குறிப்பிட்ட எண் கொண்ட அறையில் தான் கதை கேட்பேன் என்று பல கண்டீசன் போட்டுள்ளார். தயாரிப்பு தரப்பும் அந்த ரூமையே புக் செய்து, இயக்குனரை கதை சொல்ல அனுப்பியுள்ளது.

ஆனால் நீண்ட நேரமாகியும் அஷ்வின் வரவில்லையாம். இதனையடுத்து
இயக்குனர் அஷ்வினை தொடர்புகொண்டு கேட்டதற்கு, எனக்கு இப்போ கதை கேட்கும் மூடே இல்லை. நாளைக்கு வந்து சொல்லுங்க என கூறிவிட்டாராம். இதனால் கடுப்பான தயாரிப்பாளர் அப்படிப்பட்ட ஹீரோவே நமக்கு தேவையில்லை என கூறி ஹீரோவை மாற்றியுள்ளார். தனது ஆணவத்தால் அஷ்வின் அவரின் கெரியரை தொலைத்து கொண்டிருக்கிறார் என்பது தான் உண்மை.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment