மேகாலாயாவில் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் விதிதல் தற்போது 58.61% சதவீதமாகவும், நாகாலாந்தில் 59. 29% சதவீதம் உள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறியுள்ளது.
சமீப காலம் வரை அரசு அளிக்கும் உதவிகள், நலத்திட்டங்களை பெற மேகாலயாவில் ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என அறிவிக்கப்படாததால் ஆதார் பதிவு விகிதம் மிக குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
மேகாலாயாவில் ஆதார் அட்டைகள் பெற்றவர்கள் விகிதம் 2016- ல் 3.6% விகிதமும், 2020-ல் 30.6%, 2022- ல் 48.3 % சதவீதமாக இருந்தது. தற்போது அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் அட்டைகளை கட்டாயமாக்கப்பட்ட பின் ஆதார் அட்டை பெற்றவர்கள் எண்ணிக்கை 58.61% உயர்ந்துள்ளது.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு 70% ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேகாலயா அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே நாகாலாந்தில் ஆதார் அட்டைகளுக்கு எதிராக பிரச்சாரங்கள் நடத்தியதால் பதிவு எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதனால் நாகாலாந்தில் 2022 ஆண்டில் ஆதார் அட்டை 59.29% சதவீதமாக உள்ளது. இந்நிலையில் மேகாலயா, நாகாலாந்தில் தற்போது 40 % நபர்களுக்கு ஆதார் அட்டை இல்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.