ஷூவில் இருந்த விசிலை விழுங்கிய 4 வயது குழந்தை.. உயிரை கொடுத்து காப்பாற்றிய மருத்துவர்கள்..!

நான்கு வயது குழந்தை ஷூவில் இருந்த விசிலை விழுங்கி விட்ட நிலையில் அந்த குழந்தையை எய்ம்ஸ் மருத்துவர்கள் காப்பாற்றி உள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த 4 வயது குழந்தைக்கு அவரது தந்தை ஆசை ஆசையாய் புத்தம் புதிய ஷூ வாங்கி கொடுத்தார். அந்த ஷூவில் விசில் இருந்ததை அடுத்து குழந்தை ஷூவை அணிந்து நடக்கும்போதெல்லாம் அதிலிருந்து விசில் சத்தம் கேட்கும். இந்த வித்தியாசமான ஷூவை குழந்தை மிகவும் ரசித்து அணிந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஷூவில் இருந்த விசிலை எடுத்த குழந்தை அதை வாயில் வைத்து விழுங்கிவிட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அந்த குழந்தை மூச்சு விட சிரமப்பட்டு இருந்ததை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் அந்த குழந்தையை காப்பாற்ற அதிரடி நடவடிக்கை எடுத்தனர்

whistle scaledசர்ஜரி செய்தால் மட்டுமே அந்த குழந்தையை காப்பாற்ற முடியும் என்று முடிவு செய்து அவர்கள் உடனடியாக சர்ஜரிக்கு ஏற்பாடு செய்தனர். குழந்தைக்கு மருத்துவ சோதனை செய்து சர்ஜரிக்கு அவரது உடல் ஒத்துழைக்கும் என உறுதி செய்ததை எடுத்து உடனடியாக சர்ஜரிக்கு  ஏற்பாடு செய்யப்பட்டது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தங்கள் உயிரை கொடுத்து அந்த குழந்தையின் தொண்டையில் இருந்த விசிலை வெளியே எடுத்தனர். இதனை அடுத்து குழந்தை தற்போது நலமாக இருப்பதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நான்கு வயது குழந்தை விசிலை விழுங்கி உயிருக்கு போராடிய நிலையில் அவரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பெற்றோர்கள் தங்கள் நன்றியை கூறியுள்ளனர். இன்னும் சிலமணி நேரம் தாமதம் செய்திருந்தால் குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு இருக்கும் என்று ஆனால் அதிர்ஷ்டவசமாக குழந்தை சரியான நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் காப்பாற்றப்பட்டது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.