மதுரையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக நம் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று ஒரே நாளில் மதுரையில் 50 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 40 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில் இவர்களுக்கு தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை சந்தைபேட்டை சேர்ந்த 4-வயது சிறுமி டெங்கு காய்ச்சல் காரணமாக கடந்த 19-ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகைய சம்பவமானது மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.