4 வயது மகன் முன்பே கொடூர கொலை! தப்பியோடியவருக்கு போலீஸ் வலைவீச்சு!!

தமிழகத்தில் நாள்தோறும் கொலை சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே வருகிறது. இவை பெரு நகரங்கள் தொடங்கி கிராமப் பகுதிகள் வரைக்கும் கொலைகள் அதிகமாக நிகழ்கிறது. பெரும்பாலான கொலைகள் பொறாமை மற்றும் வாக்குவாதத்தின் விளைவாகவே காணப்படுகிறது.

இந்த சூழலில் மகன் கண் முன்னே தந்தை வெட்டிக் கொல்லப்பட்ட கொடூரம் தமிழகத்தில் இன்று நிகழ்ந்து அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. இந்த சம்பவம் திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை அருகே நிகழ்ந்துள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே மகன் கண் முன்பு தந்தையை வெட்டி கொன்றவர்களுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அதன்படி நான்கு வயது மகனுடன் தந்தை பாலமுருகன் குளிப்பதற்காக கிணற்றுக்குச் சென்று உள்ளார். தந்தைக்கு 34 வயது ஆகிறது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கிணற்றில் குளிக்கச் சென்ற பாலமுருகனை 4 வயது மகன் கண் முன்னே வெட்டி கொலை செய்துள்ளனர்.

இந்த கொலையை அதே ஊரை சேர்ந்த ஆதினமிளகி என்பவர் செய்துள்ளார்.  ஆதினமிளகி அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளார். பாலமுருகனை கொலை செய்த ஆதினமிளகியை வளநாடு போலீஸ் தேடி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment