News
4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளியின் மனைவியே உடந்தை என தகவல்

4 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதற்கு குற்றவாளியின் மனைவியே உடந்தையாக இருந்ததாகவும் உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மும்பையைச் சேர்ந்த ஒரு பெண் தனது 4 வயது குழந்தையை வீட்டில் தனியாக வைத்துவிட்டு வேலைக்கு சென்றார். அவர் திரும்பிவந்து பார்த்தபோது அந்த குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. அந்த குழந்தையை எழுப்பி சாப்பிட வா என்று கேட்ட போது தன்னுடைய மர்ம உறுப்பு வலிப்பதாகவும் பக்கத்து வீட்டில் உள்ள ஒருவர் தனது தன்னை தொந்தரவு செய்ததாகவும் கூறினார்
இதனை அடுத்து அந்தப் பெண் தனது குழந்தையுடன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் செய்தார். காவல்துறையினர் விசாரித்தபோது அந்த பெண்ணின் பக்கத்து வீட்டிலுள்ள பெண் தான் குழந்தையை அழைத்து தனது வீட்டுக்கு சென்று சாப்பாடு கொடுத்ததாகவும், அதன் பின்னர் குழந்தையை தனது கணவருடன் விட்டு விட்டு வெளியே சென்று விட்டதாகவும் தெரிகிறது
அதன்பின் அந்த பெண்ணின் கணவர் 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை பக்கத்து வீட்டில் உள்ள ஒரு சிறுவன் நேரடியாக பார்த்து அவருடைய மனைவியிடம் கூறியபோது, இதையெல்லாம் கண்டு கொள்ளாதே யாரிடமும் சொல்லாதே என்று கூறியதாக தெரிகிறது
இதனையடுத்து காவல்துறையினர் 38 வயது நபர் மற்றும் அவருடைய மனைவியை விசாரணை செய்து வருகின்றனர். 4 வயது குழந்தையை 38 வயது நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
