#BREAKING: இலவச புடவை வாங்க சென்ற 4 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு?

இலவச புடவை வாங்கச் சென்ற 4 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜின்னா பாலம் அருகில் தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் இலவச புடவைகள் வழங்குவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் கூட்ட நெருச்சலில் சிக்கி பெண்கள் பலர் மயக்கம் அடைந்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 4 பேர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில்,  வருவாய் துறையினர் மற்றும் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.