நம் தமிழகத்தை பொறுத்தவரையில் கடந்த சில தினங்களாக விவசாயிகளுக்கு உரம் வழங்குவதில் தட்டுப்பாடு நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக பல்வேறு மாவட்டங்களில் உரங்களை பதுக்குவதாக விவசாயிகள் மத்தியில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விவசாயிகளின் தேவைக்கேற்ப உரம் வழங்குவது மற்றும் உரம் பதுக்குதலை குறைக்க வேளாண் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கழிவறையை சுத்தம் செய்த தலித் மாணவர்கள்: தலைமையாசிரியர் கைது!!
இந்நிலையில் மலேசியாவில் இருந்து 44 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரம் காரைக்கால் துறைமுகத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது உரத்தின் தரம் குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார்.
குறிப்பாக உரங்களை 45 கிலோ விதத்தில் மூட்டை மூட்டையாக பேக்கிங் செய்து தேவைகளுக்கு ஏற்றவாறு பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
குஷியோ குஷி!! உதவி பேராசிரியர்கள் நியமனம் திடீர் ரத்து..!!!
மேலும், தமிழகத்தில் ரபி பருவம் தொடங்கியுள்ளதால் சிறுதானியங்கள், நெல், பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிரிடுவதில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.