‘4 %கமிஷன்’; ஒன்னு ஆதாரம்! இல்லன்னா உங்க வழக்கப்படி மன்னிப்பு!!

தமிழகத்தில் மின்வாரியத் துறை அமைச்சராக உள்ளார் செந்தில் பாலாஜி. அவர் சட்டப்பேரவையில் தமிழகத்தில் ஏற்படும் மின்வெட்டு குறித்தும் தமிழகம் பெற்றுள்ள மின்கடன் குறித்தும்  புள்ளி விவரத்தோடு பேசினார்.அண்ணாமலை செந்தில் பாலாஜி

அவர் தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி பேசியுள்ளார். மின் வாரியத்தில் முறைகேடு எனக்கூறும் அண்ணாமலையிடம் ஆதாரத்தை கேட்டோம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

அவரிடத்தில் ஆதாரம் கேட்டால் வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதி விவரங்களை வெளியிட்டுள்ளார் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

4 சதவீதம் கமிஷன் என மீண்டும் பொய் புகார் கூறி திமுக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த பார்க்கிறார் அண்ணாமலை என்றும் கூறியுள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி. 4 சதவீதம் கமிஷன் எனக்கூறும் அண்ணாமலை அந்த கமிஷனுக்கு ஆதாரத்தை உடனே வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆதாரத்தை வெளியிடவில்லை எனில் அவர்களின் வழக்கப்படி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். 2021 மார்ச் முதல் மே 6-ஆம் தேதி வரை மின் கொள்முதல், தளவாட கொள்முதல், ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைத்தொகை இருந்தது என்றும் கூறியுள்ளார்.

அக்டோபர் 1ல் PFC & REC நிறுவனங்களிடமிருந்து நிதி வந்தபின் அந்த அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றும் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment