கள்ளகுறிச்சி கலவரத்தில் ஈடுபட்ட 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த மாதம் ஜூலை 13ஆம் தேதி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கடந்த 17-ம் தேதி போராட்டமானது கலவரமாக வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பாக 367 பேர் இதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் பகலவன் பரிந்துரையின் பேரில் பூவரசன், பரமேஸ்வரன், வசந்தன், சஞ்சிவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் கலவரத்தின் போது, போலீசார் வாகனத்திற்கு தீ வைத்தது, போலீசார் மீது கல்வீசியது, மாடு ஒன்றை திருடி சென்தின் அடிப்படையின் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.