Connect with us

கோர விபத்து!! பேருந்து மீது லாரி மோதியதில் 4 பேர் பலி!!

accident 1

செய்திகள்

கோர விபத்து!! பேருந்து மீது லாரி மோதியதில் 4 பேர் பலி!!

உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் இன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது லாரி மோதியதில் 4 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே வட மாநிலங்களை பொறுத்தவரையில் விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டபோதிலும் இன்னும் குறைந்தபாடில்லை.

அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் மகுங்குபூர் அருகே நேபாளத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற இரண்டடுக்கு பேருந்து, கோவா நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது டயர் மாற்றுவதற்காக சாலையோரம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் திடீரென எதிர்பாராத விதமாக பேருந்தின் பின்புறம் வேகமாக வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் பேருந்து அப்பளம் போல் நொறுங்கியது.
இதில் பேருந்தில் இருந்த 4 பேர் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.

மேலும் 24 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதோடு விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top