சென்னையில் சோகம்!! ரசாயன வாயு தாக்கி 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

சென்னை கொடூங்கையூரில் உள்ள தொழிற்சாலையில் வாயு கசிந்ததில் பாதிக்கப்பட்ட 4 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன

சென்னை கொடூங்கையூர் சாஸ்திர நகர் பகுதியில் இருக்கும் வெங்கடேசன் என்பவர் இரசாயன ஆலையை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு 11 மணியளவில் இரசாயனம் நிரப்பட்ட டிரம்மில் இருந்து வாயு வெளியேறியதாக கூறப்படுகிறது.

‘செய்யும் தொழிலே தெய்வம்’… மைல் கல்லுக்கு ஆயுதபூஜை கொண்டாடிய சாலை பணியாளர்கள்!

அப்போது அங்கு பணியாற்றி கொண்டிருந்த தேன்மொழி, அமுதவள்ளி, வெங்கடேசன் ஆகியோர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்களின் அலரல் சத்தம் கேட்டு சுரேஷ் என்பவர் உள்ளே சென்றதாக கூறப்படுகிறது.

அவரும் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து கொடூங்கையூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று 4 பேரையும் மீட்டனர்.

பெரும் ஏமாற்றம்…. தங்கம் விலை கிடுகிடு உயர்வு: எவ்வளவு தெரியுமா?

தற்போது அவர்களுக்கு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment