இலங்கையில் புதியதாக 4 அமைச்சர்கள் பதவியேற்பு !!
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுக்க அனைத்துக்கட்சிகள் அடங்கிய புதிய அமைச்சரவை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி, இன்று புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இதனிடையே நேற்று நள்ளிரவில் முக்கிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் இலங்கையில் பொருளாதர நெருக்கடியை சரி செய்ய இலங்கை பிரதமர் பதவி விலக வேண்டும் என குரல் ஒலித்தது.
அந்த வகையில் இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். இதனை தொடர்ந்து இன்று அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் 4 அமைச்சர்கள் புதியதாக பதவியேற்றனர்.
இவற்றில் நிதி அமைச்சராக அலி சப்ரி, கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்த்தன, வெளியுறவுத்துறை அமைச்சராக ஜி.எல்.பெய்ரிஸ் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பெர்னாண்டோ ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்.
