அதிசய பவுலிங்: 4 மெயின்டன் ஓவர்; 2 விக்கெட்ஸ்! இந்திய வீரர் சாதனை!!

கிரிக்கெட் போட்டி என்றால் அனைவரும் ஆரவாரத்தோடு பார்ப்பது பேட்டிங்கை தான். ஆனால் பேட்டிங்கை நிலைகுலைய வைக்கும் பந்துவீச்சு தான் ஒரு அணிக்கு மிகவும் முக்கியமானதாக அமையும்.

அக்ஷய் கர்நிவர்

பல நேரங்களில் சிறந்த பந்து வீச்சால் ஆட்டங்கள் திசை திருப்பக் கூடும். இந்த நிலையில் இந்தியாவில் சையது முஷ்டாக் அலி டிராபி சீரிஸ் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

தற்போது பந்து வீச்சாளர் ஒருவர் தனது 4 ஓவர்களில் மெயின்டன் பவுலிங் செய்து 2 விக்கெட்களை கைப்பற்றி உலக கிரிக்கெட் வாரியத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

அதன்படி இவர் சையது முஷ்டாக் அலி தொடரில் வித்ரபா அணிக்காக விளையாடிக் கொண்டு வரும் அக்ஷய் கர்நிவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இவர் இந்த சாதனையை மணிப்பூர் அணிக்கு எதிராக நிகழ்த்தியுள்ளார். இதனால் இவருக்கு வாழ்த்துக்கள் வந்த வண்ணமாக உள்ளன.இவர் இரண்டு கைகளாலும் பந்துவீச கூடிய சூழல் பந்துவீச்சாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுபோன்று பந்து வீசும் முதல் இந்திய வீரர் என்ற பெயரையும் இவர் பெற்றுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment