News
டெல்லி ஹைகோர்ட்டில் ரவுடிகள் துப்பாக்கி சண்டை; 4 பேர் உயிரிழப்பு!!
தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உயர்நீதிமன்றம் காணப்படுகிறது. மேலும் இந்தியாவின் முதன்மை நீதிமன்ற உச்ச நீதிமன்றம் உள்ளது. உச்சநீதிமன்றத்துக்கு அடுத்தபடியாக இந்த உயர் நீதிமன்றம் காணப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உயர் நீதிமன்றம் சென்னையில் காணப்படுவது போல இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் டெல்லி உயர்நீதிமன்றம் காணப்படுகிறது.
இந்நிலையில் உயர்நீதிமன்றங்களில் தினந்தோறும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் சில அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன்படி டெல்லி கோர்ட்டில் ரவுடிகள் இடையே துப்பாக்கி சண்டை நிகழ்ந்துள்ளன. அதன்படி டெல்லி கீழமை நீதிமன்றத்தில் நீதிபதி முன் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நீதிபதி அறை 217ல் நீதிபதி ககன்தீப்சிங் முன்பாக இருதரப்பு ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர்.
பிரபல ரவுடி ஜிதேந்தர் கோரி ,வழக்கறிஞர்கள் உடையில் இருந்த 2 ரவுடிகள் உள்பட 4 பேர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளனர். ரவுடிகள் இடையே இருந்த முன்பகை காரணமாக நடந்த துப்பாக்கி சண்டையில் சுமார் 10 பேர் காயமடைந்தனர்.
