விடுதலையான 4 பேர் இலங்கைக்கு அனுப்பப்படுவர் – கலெக்டர் பேட்டி!

ராஜிவ்காந்தி வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள 4 பேரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பேட்டி கொடுத்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் முருகன், சாந்தன், ராபர்ட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் ஏற்கனவே அனுமதியின்றி இந்தியா வந்ததற்கான வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சிக்கன் பிரியாணி சாப்பிட்டதால் நேர்ந்த சோகம்.. 30 மாணவிகளுக்கு சிகிச்சை!

இதன் காரணமாக தற்போது திருச்சி மத்திய முகாமில் தங்க வைத்துள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதே போல் 4 பேரின் உறவினர்கள் அவர்களை பார்க்கலாம் என்றும் அவர்கள் உண்ணாவிரதம் இருப்பதாக வெளியாத தகவல் போலியானது என தெரிவித்துள்ளார்.

அடடே! நடிகர் கார்த்தியின் பேஸ்ஃபுக் ஹேக்.. ஷாக்கான ரசிகர்கள்!!

மேலும், முகாமில் இருக்கும் 4 பேரும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தால், அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment