குமரிக்கடல் டூ அரபிக்கடல் போகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! 4 மாவட்டங்களில் மிக கனமழை! 14 மாவட்டங்களில் கனமழை!!

தமிழகத்தில் தற்போது பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையமானது தமிழகத்தில் குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

அதன்படி திருவள்ளூர் உட்பட நான்கு மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.வானிலை மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குமரிக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் அரபிக் கடல் பகுதிக்கு நகரக் கூடும் என்றும் கூறியுள்ளது.

சென்னை உட்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி சென்னை, விழுப்புரம், கடலூர், வேலூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment