4 மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்கள் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு!

தமிழகத்தில் இன்றைய தினம் காலை சென்னை உட்பட 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தன. ஏனென்றால் அங்கு மழை நீரானது தேங்கிய நிலையில் காணப்பட்டதால் மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

சென்னை

அதோடு மட்டுமில்லாமல் சென்னையில் உள்ள பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது விடுமுறை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி மழை காரணமாக நேற்றும் இன்றும் விடப்பட்ட விடுமுறை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த விடுமுறை நான்கு மாவட்டங்களுக்கு விடப்படும் என்று கூறப்படுகிறது.

மழை

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய இரண்டு தினங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஏனென்றால் அங்கு மழைநீர் இன்னும் வடியாத சூழலில் மேலும் மழை பெய்யும் என எச்சரிப்பட்டுள்ளதால் இந்த விடுமுறை இரண்டு நாட்களுக்கு  நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment