Connect with us

இன்று நான்கு மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை.!!

மழை

தமிழகம்

இன்று நான்கு மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை.!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தென் தமிழக மாவட்டங்களில் சில நாட்களாக மிதமான மழை இரவு நேரங்களில் பெய்தது. இதனால் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் மெல்ல மெல்ல நிரம்பி கொண்டு வருகிறது.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடர்ந்து மிதமான மழை தினம் தோறும் கிடைத்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களில் அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனீ ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள ஓரிரு இடங்களில் இன்று அதிக கன மழை வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் காட்டியுள்ளதாகவும் தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top