சாலை போடாமலேயே 3 கோடி ரூபாய் ஊழல்; 4 பேர் சஸ்பெண்ட்..!! ஒப்பந்ததாரர் இவரோட ஆதரவாளரா?
தற்போது நம் நாட்டில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பது தான் அதிகமாக காணப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பல்வேறுவிதமான துறைகளில் சான்றிதழ் வாங்குவதற்கு கூட லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலைமை காணப்படுவது வேதனை அளிப்பதாக காணப்பட்டது என்று கூறினர்.
அதோடு மட்டுமல்லாமல் பல துறைகளில் பணி நடைபெறுவதாக கூறி ஊழல் செய்வது நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது. அந்த வகையில் சாலை போடுவதாக கூறி மூன்று கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது தெரிந்துள்ளது.
இதனால் இந்த செயலில் ஈடுபட்ட 4 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் 3 கோடி ரூபாய் ஊழல் என எழுந்த புகாரில் நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சத்யபாமா, உதவி கோட்ட பொறியாளர் கண்ணன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இளநிலை பொறியாளர் பூபாலன், கணக்கர் பெரியசாமி ஆகியோர் சஸ்பெண்ட்.
சாலை போட்டு விட்டதாக கூறி சாலை போடாமலேயே அதிகாரிகள் துணையுடன் பணத்தை முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. அமைச்சர் செந்தில்பாலாஜி ஆதரவாளரான ஒப்பந்ததாரர் மீது அதிமுகவினர் புகார் கூறி இருந்தது.
