Connect with us

இனிப்பு சாப்பிட்டதால் உயிர் இழந்த 4 குழந்தைகள்.. உத்திரபிரதேசத்தை உலுக்கிய சம்பவம்!

Untitled 53

செய்திகள்

இனிப்பு சாப்பிட்டதால் உயிர் இழந்த 4 குழந்தைகள்.. உத்திரபிரதேசத்தை உலுக்கிய சம்பவம்!

இனிப்பு சாப்பிட்டதால் உயிர் இழந்த 4 குழந்தைகள்.. உத்திரபிரதேசத்தை உலுக்கிய சம்பவம்!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகர் மாவட்டத்தின் அருகே உள்ள திலிப் நகரில் இனிப்பு சாப்பிட்ட 4 குழந்தைகள் உயிர் இழந்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது திலிப் நகரில் வசித்துவரும் முகியா தேவி தன்னுடைய வீட்டை சுத்தம் செய்துள்ளார். வீட்டை சுத்தம் செய்தபோது வீட்டில் ஒரு பிளாஸ்டிக் கவரில் இனிப்புகள் இருந்துள்ளது.

அதை எடுத்துவந்து தன்னுடைய பேரப்பிள்ளைகள் 3 பேருக்கும் மற்றும் பக்கத்து வீட்டு குழந்தைகள் 4 பேருக்கும் கொடுத்துள்ளார். குழந்தைகள் பாட்டி கொடுத்த இனிப்பை ஆர்வத்துடன் வாங்கிச் சாப்பிட்டுள்ளனர்.

இனிப்பை சாப்பிட்ட குழந்தைகள் சில நிமிடங்களில் மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளனர். அப்போது முகியா தேவி பக்கத்து வீட்டுக் காரர்களின் உதவியோடு குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

குழந்தைகளைப் பரிசோதித்த டாக்டர்கள் 4 குழந்தைள் உயிர் இழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். மேலும் இனிப்பு குறித்து ஆய்வு செய்து பார்க்கையில் அது காலாவதி ஆகி, விஷமாக மாறி இருப்பது தெரியவந்துள்ளது. இனிப்பு சாப்பிட்டு 4 குழந்தைகள் உயிர் இழந்தது அப்பகுதி மக்களை கலங்க வைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top