தமிழகம் முழுவதும் 4.63 ரேஷன் கார்டுகள் ரத்து : அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு !!

தமிழகம் முழுவதும் 4.63 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை தரவுகள் கூறுகின்றன.

கடந்த ஏப்ரல் 2017-ல் ஸ்மார்ட்  ரேஷன் கார்டுகளை அறிமுகப்படுத்தப்பட்ட பின் ஆதார் எண்கள் இணைக்கும் பணி துவங்கியது.  இதன் மூலம்  போலி ரேஷன் கார்டுகளை களை எடுக்கும் பணி வேகம் எடுக்கப்பட்டது.

இதன்மூலம் இறப்புகள் மட்டும் இடம் மாறுதலால் அங்கீகாரத்தை கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் 35,307 ரேஷன் கார்டுகளும், 2020- ஆம் ஆண்டு 21, 934 ரேஷன் கார்டுகளும், 2021- ஆம் ஆண்டு 2,00,942 ரேஷன் கார்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து 2022 பிப்.மாதம் வரை 2671 ரேஷன் கார்டுகள் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதற்கிடையில் கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் 4.3 ரேஷன் காட்டுகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இறப்பு பதிவேடு, ரேஷன் கார்டு தரவுகளை மென்பொருள் இணைக்கும் திட்டத்தின் மூலம் போலி ரேசன்கார்டுகளை உடனுக்குடன் கண்டறிந்து ரத்துசெய்யப்பட்டதாக எதிர்பார்க்கப்பட்டன. மேலும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன்னுரிமை அளிக்கப்படும் ரேஷன் கார்டுகளுக்கு மட்டுமே பலன்கள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment