Connect with us

டிஎன்பிஎஸ்சி குரூப் 4: டாப் 100ல் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 40 பேர் வந்தது எப்படி?

Tamil Nadu

டிஎன்பிஎஸ்சி குரூப் 4: டாப் 100ல் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 40 பேர் வந்தது எப்படி?


d4e502288943a3d9a8189275260402e1

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களின் தரவரிசை பட்டியலில் முதல் நூறு இடங்களுக்குள் வந்தவர்களில் 40 பேர்கள் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்று தெரிய வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவையர், தட்டச்சர் போன்ற பணிகளுக்காக குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு நடந்த நிலையில் இந்த தேர்வின் முடிவு சமிபத்தில் வெளிவந்தது

இதில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 40 பேர் முதல் 100 இடங்களுக்குள் வந்துள்ளது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. மாநிலம் முழுவதும் நடந்த தேர்வில் ஒரு பகுதியில் மட்டும் தேர்வு எழுதியவர்கள் எப்படி 100 பேர்களில் 40 பேர் வரமுடியும் என்ற கேள்வியை அனைவரும் எழுப்பி வருகின்றனர்.

மேலும் பட்டியலில் வந்த 40 பேர்களும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதும் இவர்கள் எதற்காக தேர்வெழுத பல கிலோமீட்டர் பயணம் செய்து ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களை தேர்வு செய்தனர் என்பதும் பெரும் கேள்விக்குறியாக உள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top