செய்திகள்
3ஆம் அலை தீவிரம்: ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு!
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கடந்த சில மாதங்களாக வீசிக் கொண்டிருந்த நிலையில் தற்போது தான் கிட்டத்தட்ட இரண்டாவது அலை முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது
இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் மூன்றாவது அலை இந்தியாவில் தாக்கும் என்றும் அப்போது குழந்தைகளை அதிகம் தாக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் ஏற்கனவே மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இடையே மூன்றாவது அலை தீவிரமடையும் என்று தெரிவித்துள்ளனர். அதற்குள் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பு ஊசியை செலுத்தி விட வேண்டும் என்றும் குறிப்பாக குழந்தைகளுக்கான தடுப்பூசியை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்
