தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் விஜய். இவர் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அதே போல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு போன்ற முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.
வருகின்ற 2023 பொங்கலை முன்னிட்டு இந்த படம் வெளியாக இருப்பதால் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்த சூழலில் படத்தின் 1,2 சிங்கிள் பாடல்களாக ‘ரஞ்சிதமே’ மற்றும் ‘தீ தளபதி’ ஆகிய பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.
இந்த பாடல்கள் நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.
அதன் படி, விவேக் எழுதிய கே.எஸ்.சித்ரா குரலில் ஆராரிராரோ கேட்குதம்மா என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி வருகிறது.