பெற்றோர்கள் கவனத்திற்கு… இன்று முதல் போலியோ தடுப்பூசி தொடக்கம்!

தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் போலியோ 3வது தவணை தடுப்பூசி வழங்கும் திட்டம் தமிழகத்தில் இன்று தொடங்குகிறது.

குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில் தமிழகம் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது , ஆண்டுக்கு 10 லட்சம் கர்ப்பிணிகளுக்கும் 9 லட்சம் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. பிறந்த குழந்தைகளுக்கு இரு தவணைகளாக 6வது வாரத்திலும், 14வது வாரத்திலும் போலியோ தடுப்பூசி வழங்கப்படுகிறது.

இதை தவிர போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் உருவெடுத்தாலும் முன் எச்சரிக்கையாக பிறந்த குழந்தைகளுக்கு 9ல் இருந்து 12 மாதங்களுக்குள் 3ம் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் இன்று முதல் வழக்கமான தடுப்பூசிக்காக வரும் குழந்தைகளுக்கு தகுதியின் அடிப்படையில் 3 ஆம் தவணை போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கபட்டுள்ளது

தமிழகத்தில் 36 அரசு மருத்துவ கல்லூரிகள் , 50 மருத்துவ கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனைகள், 1 அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை, 1 அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 29 மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், 273 வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள், 1,806 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,713 துணை சுகாதார நிலையங்கள், 460 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 15 நகர்புற சமுதாய மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் தேசிய தடுப்பூசி அட்டவணை திட்டத்தின் அடிப்படையில் பிறந்து 9 முதல் 12 மாதங்களுக்குள் இருக்கக்கூடிய குழந்தைகள் தடுப்பூசி பெறலாம் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.