நவம்பர் மாதம் 2019 ஆம் ஆண்டு உலகிற்கு மிகுந்த அச்சத்தை உருவாக்கியது கொரோனா இந்த கொரோனா முதலில் சீன நாட்டில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் காட்டுத்தீ போல உலகெங்கும் கொரோனா பரவியது.
இதற்கு எதிராக போராடும் விதமாக ஒவ்வொரு நாடும் புதுப்புது கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக இந்தியாவில் கோவாக்சின், கோவிசில்டு போன்ற இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அதிக அளவில் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அனைவரும் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்த வேண்டும் என்று கட்டாயமாக அறிவிக்கப்பட்டுள்ளன. நம் தமிழகத்திலும் வாரத்திற்கு இரண்டு முறை கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு அதிக அளவில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்தியாவில் மூன்றாவது கொரோனா டோஸ் தடுப்பூசி பற்றி தகவல் கசிந்துள்ளது.அதன்படி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மூன்றாம் டோஸ் செலுத்துவது குறித்து அடுத்த வாரம் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.