39 கோடியில் மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம்-அரசாணை வெளியீடு!

முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்று அழைக்கப்பட்டவர் மு.கருணாநிதி. இவர் தமிழகத்தின் முதல்வராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவரை கௌரவிக்கும் வண்ணமாக இவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய இடம் அளிக்கப்பட்டது.

கருணாநிதி நினைவிடம்

அதோடு மட்டுமல்லாமல் தற்போது இவரது மகன்தான் தமிழகத்தில் முதல்வராக உள்ளார். அவர் சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று கூறியிருந்தார். இது குறித்து தமிழகத்தின் அமைச்சர் ஏ.வ.வேலு சில தினங்களுக்கு முன்பு தகவல்களை அறிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக தற்போது கருணாநிதி நினைவிடம் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மெரினாவில் மு.கருணாநிதி நினைவிடம் அமைப்பதற்கான அரசாணை தற்போது வெளியாகியுள்ளது.

2.21 ஏக்கரில் ரூபாய் 39 கோடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு திட்ட மதிப்பீடு தயாரானதால் அரசாணை வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.

நினைவிட பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் என்றும் கூறப்படுகிறது. பொதுப்பணித் துறையினர் தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி அளித்ததால் அரசாணை வெளியிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment