தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 377 பாசன ஏரிகள் முழுவதும் நிரம்பியது!

இன்று ஒரே நாளில் 377 பாசன ஏரிகள் முழுமையாக நிரப்பி உள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 377 பாசன ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டி 100% நீர் நிரம்பி உள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.

பாசன ஏரிகள்

கன்னியாகுமாரி மொத்தம் உள்ள 2040 ஏரிகளில் 670 முழு கொள்ளளவுடன் 100% நிரம்பியுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் மொத்தமுள்ள 640 ஏரிகளில் 444 முழு கொள்ளளவை எட்டி 100% நிரம்பியுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1131 பாசன ஏரிகளில் 412 ஏரிகள் 100% நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1460 ஏரிகளில் 174 ஏரிகள் 100% நீர் நிரம்பி உள்ளதாக கூறப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 697 பாசன ஏரிகளில் 607 ஏரிகள் முழுமையாக நிரம்பின.அரியலூர் மாவட்டத்தில் 58 பாசன ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. சென்னை மாவட்டத்தில் 26 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 450 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. கடலூர் மாவட்டத்தில் 172 முழுமையாக நிரம்பி உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் 66 பாசன ஏரிகள் முழுமையாக நிறைந்துள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 338 பாசன ஏரிகள் முழுமையாக நிறைந்துள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 195 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. இதனால் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள 377 பாசன ஏரிகள் முழுதாக நிரம்பி உள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment