Connect with us

இந்தியாவில் 37.15% குழந்தைகள் தூங்கும் முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா?… அதிர்ச்சி ரிப்போர்ட்!

Sleep

News

இந்தியாவில் 37.15% குழந்தைகள் தூங்கும் முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா?… அதிர்ச்சி ரிப்போர்ட்!

இந்தியாவில் 37.15% குழந்தைகள் தூங்கும் முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா?… அதிர்ச்சி ரிப்போர்ட்!

நாட்டில் 37.15% குழந்தைகள் தூங்கும் முன்னர் செல்போன்களை பயன்படுத்துகின்றனர் என மத்திய குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி ராணி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவில் உள்ள குழந்தைகள் செல்போன் பயன்பாட்டிற்கு அடிமையாகி உள்ளனரா?

இதனால் ஏற்பட்ட விளைவுகள் தொடர்பாக ஏதேனும் கணக்கெடுப்பினை மத்திய அரசு நடத்தி உள்ளதா? என மாநிலங்களவையில் உறுப்பினர் வைகோ எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, கொரனோ பரவலின் போது குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து உள்ளதா என்பது தொடர்பாக எவ்வித தரவுகளும் மத்திய அரசிடம் இல்லை

ஆனால் 23.30% குழந்தைகள் படுக்கையில் செல்போன்கள் பயன்படுத்துவதாகவும்,37.15% குழந்தைகள் தூங்குவதற்கு முன்னதாக செல்போன்கள் பயன்படுத்துவதாகவும் மத்திய குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top