எம்மாடியோ!! ஒரு கிலோ மல்லிகைப்பூ 3,600 ரூபாயா?

சங்கரன்கோவில் பூ சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3600-க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்சாசி மாவட்டம் சங்கரன்கோயில் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் மல்லிகைபூ அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பின்னர் ஏலம் மூலம் விளை நிர்ணயம் செய்யப்பட்டு அண்டை மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பயணிகள் கவனத்திற்கு! பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து!!

இந்நிலையில் நாளை கிறிஸ்துமஸ் பண்டிக்கை என்பதால் பூக்களின் விலையானது கிடுகிடுவென அதிகரித்து காணப்படுகிறது. அதன் படி, ஒரு கிலோ மல்லிகைப்பூ 700 ரூயாய்க்கு விற்பனை செய்யப்பட்டதை அடுத்து இன்று ரூ.3600க்கு விற்பனை ஆகிறது.

அதே போல் பிச்சி பூ ரூ.1,500 ரூபாய்க்கும், செம்மங்கி, சாமந்தி உள்ளிட்ட பூக்கள் ரூ.200-க்கு விற்பனை ஆகி வருகிறது. இதற்கிடையில் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூக்களின் விளைச்சல் குறைவாக உள்ளது.

குஷியோ குஷி!! ஜன-3 ம் தேதி நாகையில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!!

இருப்பினும் நாளை கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட இருப்பதால் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது. இதனால் விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விலை உயர்வினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.