மயிலாடுதுறையில் 3,500 சவரன் மோசடி: போலீசார் தீவிர விசாரணை..!!

மயிலாடுதுறை மாவட்டம் குங்கனூர் பகுதியை சேர்ந்த மஜினா. இவரிடம் கும்பகோணத்தை சேர்ந்த பாத்திமாநாட்டியார் என்பவர் 502 பவுன் கடந்த 2014-ம் ஆண்டு வாங்கிக்கொண்டு இதுவரையில் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக சீர்காழி காவல்நிலையத்தில் மஜினா புகார் கொடுத்திருந்தார்.

அப்போது இன்று விசாரணைக்கு பாத்திமாநாட்டியார் அஜராக இருந்ததாக தெரிகிறது. அப்போது சிதம்பரம், நாகப்பட்டினம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களின் உறவினர்களுடன் வந்து பாத்திமாநாட்டியார் மீது புகார் அளித்தனர்.

கடலுக்குள் பேனா சின்னம்.. ஜன.31ம் தேதி கருத்து கேட்பு கூட்டம்!!

அதில் 10 சவரன் நகை கொடுத்தால் மாதம் ரூ.15,000 தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்து பல பேரிடம் நகைகளை பெற்று மோசடி நடத்தி இருப்பது தெரியவந்து. அதன் படி, சுமார் 3042 சவரன் தங்க நகைகளை வாங்கியதாக தெரிகிறது.

தற்போது பொருளாதார குற்றப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதே போல் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாத்திமா சிறையில் இருந்து வெளியே வந்துள்ளதாக தெரிகிறது.

குழந்தைகளை கவனிப்பது தந்தையின் பொறுப்பு – ஐகோர்ட் அதிரடி!!

மேலும், தங்களுடைய கணவருக்கு தெரியாமல் நகைகளை கொடுத்து ஏமாற்ந்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீர் மழ்க வேதனை தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.