34 வயதை எட்டிய அந்த ஒரு நிமிடம்

சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே இந்த பாடலை கடந்து போகாத 80 ஸ் யுவன், யுவதிகள் யாரும் இருந்திருக்க முடியாது. அந்தபாடல் இடம்பெற்றது அந்த ஒரு நிமிடம் படத்தில்தான். மே31 -1985 அன்று ரிலீஸ் ஆனதன் மூலம் இப்படம் வெளிவந்து 34 வருடங்கள் ஆகிறது.

c383412bce72bbab9378851ad3a313b5

இப்படத்தை இயக்கியது காலஞ்சென்ற நடிகர் திரு மேஜர் சுந்தர்ராஜன். இவர் ஓரிரு படங்களை இயக்கியுள்ளார். இதில் அந்த ஒரு நிமிடமும், இன்று நீ நாளை நான் படமும் முக்கியமானது.

இந்த படத்தில் இயக்குனராக மட்டுமின்றி வில்லனாகவும் மேஜர் சுந்தர்ராஜன் நடித்திருந்தார். தன்னை எதிர்க்கும் எதிரிகளை கை கொடுத்து மோதிரத்தில் விஷ ஊசியால் குத்தி கொலை செய்யும் கொடூரமான வில்லன் வேடத்தில் இப்படத்தில் மேஜர் சுந்தர்ராஜன் நடித்திருந்தார்.

மேஜர் சுந்தர்ராஜனே தனது கீதகமலம் மூவிஸ் சார்பாக இப்படத்தை தயாரித்திருந்தார்.

கமலஹாசன், ஊர்வசி கதாநாயகன், கதாநாயகியாக நடித்திருந்த இப்படத்துக்கு இளையராஜா இசையமத்திருந்த அலைகளில் மிதக்குது, புதிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே க்ளைமாக்ஸ் பாடலான பச்சோந்தியே கேளடா, போன்ற பாடல்கள் இப்படத்துக்கு பெரும் பலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment