பொங்கல் பண்டிகை! சென்னையில் 340 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழகம் முழுவதும் வருகின்ற பொங்கல் தினத்தில் அனைத்து ஊர்களிலும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

அந்த வகையில் நாளைய தினத்தில் இருந்து 5 பேருந்து நிலையங்களில் சுமார் 340 இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதனிடையே கோயம்பேடு, மாதவரம், பூவிருந்தவல்லி, கலைஞர் நகர், தாம்பரம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் வருகின்ற 14ம் தேதி முதல் மீண்டும் 18, 19ம் தேதிகளிலும் இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயம் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் விலைக்கு பேருந்து டிக்கெட் விற்பனை செய்வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.