Entertainment
அமெரிக்கா செல்வதற்காக 82வயது வேடமிட்டு ஏர்போர்ட் வந்த 32வயது இளைஞர் கைது
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த ஜெயேஷ் படேல் என்ற இளைஞருக்கு வயது 32 ஆனால் அமெரிக்கா வேலைக்கு செல்வதற்காக 82 வயது முதியவர் போல் வேடமணிந்து இருந்திருக்கிறார்.

அமெரிக்காவுக்கு விசா கிடைப்பது கடினம். வயதானவர்களுக்கு சலுகை உண்டு அதை பயன்படுத்திய பாரத் என்ற ஏஜெண்ட், ஜெயேஷ்படேலை அமெரிக்கா அனுப்பி வைப்பதற்காக ஆவணங்களில் போர்ஜரி செய்து, இது போல ஒரு ஒப்பனை கலைஞரை வைத்து வேடமிட்டு அமெரிக்கா அனுப்பியுள்ளார்.
அங்கு சென்ற உடன் வேலை கிடைத்து தனக்கு 30 லட்சம் தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் இது போல செயல்பட்டுள்ளார் பாரத்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா செல்ல டெல்லி விமான நிலையம் வந்த இவரை போலீசார் முதலில் சோதனை செய்த பின் எதுவும் தெரியவில்லை. ஆனால் இரண்டாம் கட்ட சோதனையில் இவரை பார்த்த உடன் முதியவர் போல் தெரியவில்லையே என கருதி சோதனையிட்டுள்ளனர்.அதனால் இவர் வசமாக மாட்டிக்கொண்டார்.
ஏஜென்ட் பாரத், அவரது உதவியாளர் மற்றும் ஒப்பனை கலைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
